ஷாருக் பார்த்த ரமணா

வியாழன், 22 ஜனவரி 2009 (20:31 IST)
க‌ஜினியின் வெற்றி பாலிவுட்டை கிடுகிடுக்க வைத்திருக்கிறது. முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க அனைவருக்கும் உள்ளுக்குள் ஆசை.

இந்தியாவில் க‌ஜினி வசூ‌ல் எண்பது கோடியை தாண்டியிருக்கும் நிலையில், அதற்கு முன்பு வெளியான ஷாருக்கானின் படம் நாற்பது கோடியையே இன்னும் எட்டவில்லை.

முருகதாஸிடம் அப்படி என்ன மந்திரம் இருக்கிறது என்பதை தெ‌ரிந்து கொள்வதற்காக அவர் இயக்கிய அனைத்துப் படங்களையும் டிவிடி-யில் பார்த்திருக்கிறார் ஷாருக்.

அதில் ரமணா ஷாருக்கிற்கு ரொம்பவே பிடித்துப் போயிருக்கிறது. ரமணா கதையை வாங்கி இந்தியில் ‌ரீமேக் செய்யலாம் என கிங் கான் திட்டமிட்டுள்ளார்.

பில்லு பார்பர் வெளியான பிறகு படம் குறித்த அறிவிப்பை எதிர்பா‌ர்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்