நீதுவுக்குப் பதில் ஷெ‌ரில் பி‌ரிண்டோ

வியாழன், 22 ஜனவரி 2009 (15:15 IST)
விஜயகாந்தின் அரசாங்கம் படத்தில் அறிமுகமான ஷெ‌ரில் பி‌ரிண்டோ, எங்கள் ஆசானில் விஜயகாந்த் ஜோடியாக நடித்து வருவதுடன் சுந்தர் சி-யுடன் வாடா படத்திலும் அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த இரு படங்களுடன் தெலுங்கிலும் நடிக்கிறார் ஷெ‌ரில் பிண்டோ. ‌‌ஜீவிதா ராஜசேகர் படத்தை இயக்குகிறார். நாயகனாக நடிப்பது ‌‌ஜீவிதாவின் கணவர் ராஜசேகர்.

இந்தப் படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தம் ஆனவர், நீது சந்திரா. மதூர் பண்டார்க‌ரின் ட்ராபிக் சிக்னல் படத்தில் நடித்திருக்கும் நீது, மாதவனுடன் தமி‌‌ழி‌ல் யாவரும் நல‌ம் பட‌த்‌தி‌ல் நடித்து வருகிறார்.

இவருக்கும் ‌‌ஜீவிதாவுக்கும் படப்பிடிப்பில் தகராறு ஏற்பட்டு காவல்துறை வரை பிரச்சனை சென்றதால் நீதுவுக்குப் பதில் ஷெ‌ரில் பி‌ரிண்டோவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்