‘விஷ்ணுவர்தனின் படம் இப்படித்தான் இருக்கும் என யாரும் ஜட்ஜ் பண்ணக் கூடாது.’ சர்வம் படத்தை தொடங்கும் முன் இயக்குனர் விஷ்ணுவர்தன் தனக்குத்தானே விதித்துக் கொண்ட சபதம் இது.
இந்த சபதத்திற்கு சாட்சி சொல்வதுபோல் தயாராகியிருக்கிறது, சர்வம். படத்தில் மொத்தம் ஐந்தே கதாபாத்திரங்கள். ஆர்யா, த்ரிஷா, ஜெ.டி. சக்ரவர்த்தி, இந்திரஜித் ஐந்தாவதாக ஒரு நாய்க் குட்டி.
படத்தின் முதல் பகுதி சென்னையை சுற்றி நடக்கிறது. காதல், காமெடி பிரதானம். இரண்டாம் பகுதி யாராலும் யூகிக்க முடியாதது. முதல் பகுதிக்கு முற்றிலும் மாறுபட்ட லொகேஷன், காட்சிகள்.
அடர்ந்த காட்டில் க்ரைம் த்ரில்லராக புதிய பரிமாணம் கொள்கிறது படம். தனது முந்தைய படங்களின் சாயல் துளியும் இதில் இருக்காது என அடித்து சொல்கிறார் விஷ்ணுவர்தன்.