பாடகர், காமெடி நடிகர், ஹீரோ... கருணாஸின் நான்காவது அவதாரம், இசையமைப்பாளர். சினிமாவுக்கு வரும்முன் சொந்தமாக மியூஸிக் ட்ரூப் வைத்திருந்த கருணாஸின் நீண்டநாள் கனவு இசையமைப்பாளராக வேண்டும்.
ஷக்தி சிதம்பரம் இயக்கும் ராஜாதிராஜாவில் இசையமைப்பாளரும், தனது நண்பருமான பால் ஜெ-யுடன் இணைந்து இசையமைக்கிறார் கருணாஸ். இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,
“என்னைவிட என்னுடைய மனைவிதான், நான் இசையமைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். அவர் உற்சாகப்படுத்தியதால்தான் ராஜாதிராஜாவில் இசையமைக்க முடிவு செய்தேன். மேலும், பால் ஜெ என்னுடைய நீண்டகால நண்பன். ஆதனால் இணைந்து இசையமைப்பதில் எந்த சிரமமும் இல்லை.”
ராஜாதிராஜாவில் பணமா பாசமா படத்தில் இடம்பெற்ற எலந்த பழம் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். இந்தப் பாடலுக்கு லாரன்ஸுடன், மீனாட்சி ஆடியிருக்கிறார்.