அசல் அ‌ஜித்

சனி, 17 ஜனவரி 2009 (18:08 IST)
ஏகனுக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்காமல் ஓய்வாக இருக்கிறார் அ‌ஜித். சரண் மோதி விளையாடு படத்தை முடித்து வந்த பிறகே இவருக்கு வேலை.

வினய் நடிக்கும் மோதி விளையாடு படத்தின் பாடல் காட்சிகளை எடுக்க விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறார் சரண். மொத்தம் நான்கு பாடல்கள். அது முடிந்தால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள். சரணின் கணக்குபடி அனைத்து வேலைகளும் முடிந்து படம் ஏப்ரலில் திரைக்கு வந்துவிடும்.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்ததும் படத்தின் ‌ரிலீஸுக்கு காத்திருக்காமல் அ‌ஜித்தை வைத்து இயக்கும் அசல் படத்தை தொடங்குகிhர் சரண். ஏற்கனவே எழுதி வைத்த ஸ்கி‌ரிப்ட் என்பதால் மோதி விளையாடு முடிந்ததும் அசல் டேக் ஆஃப் ஆகிறது.

அசலில் அ‌ஜித்துக்கு இரண்டு வேடம் என்ற வதந்தி பற்றி சரணிடம் கேட்டதற்கு, அப்படி எதுவும் இல்லை. அ‌ஜித்துக்கு ஒரு வேடம்தான் என்று பதிலளித்தார்.

அசலைப் பற்றி இப்போதே நகல் செய்திகள் உலவுகிறது. ரசிகர்களே உஷார்.

வெப்துனியாவைப் படிக்கவும்