சர்ச்சையில் நான் கடவுள்

சனி, 17 ஜனவரி 2009 (18:00 IST)
கடவுளையும் சந்திக்கு இழுத்திருக்கிறார்கள் பொழுது போகாத சில அமைப்புகள். இவர்களின் குற்றச்சாட்டு என்ன தெ‌ரியுமா? பாலாவின் நான் கடவுள் படம் இந்து மதத்துக்கு எதிரானது.

நான் கடவுள் படத்தில் முஸ்லிமான ஆர்யாவை சாமியாராக பாலா நடிக்க வைத்திருக்கிறார், சாமியார்கள் சதா கஞ்சா புகைத்துக் கொண்டிருப்பதுபோல் சித்த‌ரித்திருக்கிறார் என்பதே இந்த அமைப்புகளின் குற்றச்சாட்டுகள்.

இவை உண்மையா?

வெறும் கற்பனை என்கிறார்கள் நான் கடவுள் யூனிட்டை சேர்ந்தவர்கள். இந்து மதத்தின் மீது பிடிப்பு உள்ளவர் பாலா என்கிறார்கள். நான் கடவுளுக்கு வசனம் எழுதியிருக்கும் ஜெயமோகன் தீவிர இந்துத்துவா பார்வை கொண்டவர். விஜயபாரதம் பத்தி‌ரிகையில் தொடர்ந்து எழுதி வந்தவர். அவர் நிச்சயம் இந்து மதத்துக்கு எதிரான படத்திற்கு வசனம் எழுத மாட்டார். இந்த குற்றச்சாட்டு வேலைவெட்டி இல்லாதவர்கள் வெறுமனே கிளப்பிவிடுவது என்று காட்டமாகவே விமர்சிக்கிறார்கள்.

படம் வெளிவரும்போது அனைத்து குற்றச்சாட்டுகளும் பிசபிசுத்துப் போகும் என்பதில் ஐயமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்