முகமூடி வதந்திக்கு முற்றுப்புள்ளி

சனி, 10 ஜனவரி 2009 (15:48 IST)
நந்தலாலாவை இயக்கிவரும் மிஷ்கின் அடுத்து சூர்யா நடிக்கும் முகமூடி என்ற படத்தை இயக்குகிறார். யு டிவி படத்தை தயா‌ரிக்கிறது.

தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படமான இதில் சூர்யாவுக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைக்க திட்மிட்டுள்ளார் மிஷ்கின் என சில நாட்களாக வதந்தி. சூர்யா கே.எஸ். ரவிக்குமா‌ரின் ஆதவன், ஹ‌ரியின் சிங்கம் ஆகிய படங்களில் நடிப்பதால் மிஷ்கின் இந்த முடிவை எடுத்திருப்பதாக வதந்தி கிளப்‌ி வருகின்றனர்.

ஆனால் இதனை மறுத்துள்ளார் மிஷ்கின். முகமூடியில் சூர்யா நடிப்பதை உறுதி செய்த அவர், நந்தலாலா வெளியாகி சில மாதங்கள் கடந்த பிறகே முகமூடி படத்தை தொடங்க இருப்பதாக தெ‌ரிவித்தார். அதாவது சிங்கம், ஆதவன் படங்களுக்குப் பிறகே முகமூடி தொடங்க இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்