வைகை பத்தி‌ரிகையாளர் சந்திப்பு

சனி, 10 ஜனவரி 2009 (15:35 IST)
பதினைந்து வருடங்களுக்கு மேலாக உதவி இயக்குனராக இருக்கும் எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கும் முதல் படம் வைகை. மானாட மயிலாட நிகழ்ச்சியில் முதலாவதாக வந்த பாலா ஹீரோவாக நடிக்கிறார்.

“வைகை படம் மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரையின் அடிப்படையிலேயே படத்தை எடுத்து வருகிறேன்” என்றார், படத்தின் பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இயக்குனர் சுந்தரபாண்டி.

எழுபது சதவீத படப்பிடிப்பு இதுவரை முடிந்திருப்பதாகவும், ஒருநாள் கூட தயா‌ரிப்பாளர் படப்பிடிப்பு நடைபெறும் இடத்துக்கு வந்ததில்லை என்றும் மேலும் அவர் தெ‌ரிவித்தார்.

படப்பிடிப்பின் போது கேரவன் வேண்டும் என்று தயா‌ரிப்பாளருடன் பிரச்சனை ஏற்படுத்தியது குறித்து பாலாவிடம் கேட்டதற்கு, அது முடிந்துபோன சம்பவம் என்றும், சில அசெளக‌ரியங்கள் காரணமாக கேரவன் கேட்டதாகவும், தயா‌ரிப்பாளருடனான மனக்கசப்பு அப்போதே தீர்ந்து விட்டதாகவும் கூறினார்.

சபேஷ் - முரளி இசையமைக்கும் இந்தப் படத்தில் விசாக நாயகியாக நடிக்கிறார். பிபி‌ஜி என்டர்பிரைசஸ் படத்தை தயா‌ரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்