‌‌ரீமேக் படம் இயக்கும் சுப்ரமணிய சிவா

வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:58 IST)
யோகி படத்தை இயக்கிவரும் சுப்ரமணிய சிவா அடுத்து மலையாள படம் ஒன்றை தமிழில் ‌‌ரீமேக் செய்கிறார்.

நவ்யா நாயர், பிருத்விரா‌ஜ் இருவரும் அறிமுகமான படம், மலையாள இயக்குனர் ரஞ்சித்தின் நந்தனம். ரேவதி பிருத்விரா‌ஜின் அம்மாவாக இதில் நடித்திருந்தார்.

குருவாயூர் கோயிலுக்கு போக வாய்ப்பில்லாத தனது பக்தைக்கு கடவுளே நே‌ரில் காட்சி தரும் இந்தப் படத்தை தமிழில் குட் நைட் மோகனின் மித் புரொட‌க்சன் தயா‌ரிக்கிறது. மலையாளத்தில் படத்தை இயக்கிய ரஞ்சித்தே தமிழ்‌ப் படத்தையும் இயக்குவதாக சொல்லப்பட்டது.

தற்போது அவருக்குப் பதில் சுப்ரமணிய சிவா படத்தை இயக்குகிறார். நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அரவிந்த் ஆகாஷ் நடித்த கடவுள் வேடத்தில் தனுஷ் நடிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்