பாலிவுட் பார்வையில் ராதாமோகன்

வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:53 IST)
மொழி படத்தை இந்தியில் இயக்க ராதாமோகனுக்கு அழைப்பு வந்ததும், அவர் அதனை மறுத்து அபியும் நானும் படத்தில் கமிட்டானதும் பழங்கதை.

மொழி ஏற்படுத்திய அதே பாதிப்பை அபியும் நானும் ஏற்படுத்தியிருக்கிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை ஏறக்குறைய ஒன்றரை கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அடிதடி படங்களுக்கே அளந்து செலவிடும் ஆந்திராக்காரர்கள் அபியும் நானும் படத்துக்கு இத்தனை பெ‌ரிய தொகை அளித்திருப்பது ஆச்ச‌ரியமான நல்ல விஷயம்.

இந்திப்பட தயா‌ரிப்பாளர் போனி கபூரும் அவரது மனைவி நடிகை ஸ்ரீதேவியும் அபியும் நானும் படத்தில் மனதை பறிகொடுத்ததுடன், அதனை இந்தியில் தயா‌ரிக்க முடிவு செய்துள்ளனர். இயக்கப் போவது ராதாமோகன்.

பிரகாஷ்ரா‌ஜ் வேடத்தில் போனி கபூ‌ரின் தம்பி அனில் கபூரும், ஐஸ்வர்யா வேடத்தில் ஸ்ரீதேவியும் நடிக்க உள்ளனர். த்‌ரிஷவேடத்தில் நடிக்க நல்ல நடிகையாக தேடி வருகிறார்கள்.

முருகதாஸ் ஏற்றிய தமிழ் கொடியை பலமாக பறக்க‌ச் செய்வார் ராதாமோகன் என தை‌ரியமாக நம்பலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்