எந்திரனில் யோகி பி

வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:48 IST)
நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இசை என எந்திரனில் தி பெஸ்ட் எதுவோ அதை மட்டுமே பயன்படுத்துகிறார், இயக்குனர் ஷங்கர்.

இசையை‌ப் பொறுத்தவரை இசைப் புயல் இழைத்து இழைத்து பாடல்களை உருவாக்கி வருகிறார். யார் யாரை பாட வைப்பது என்பதிலும் கறாராக உள்ளார் ஏ.ஆர்.

ராணுவ ரகசியத்துக்கு இணையாக நடத்தப்படும் படப்பிடிப்பிலிருந்து லேட்டஸ்டாக நமக்கு கிடைத்த தகவல், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மலேசிய பாடகர் யோகி பி பாடுகிறார்.

பொல்லாதவனில் எங்கேயும் எப்போதும் பாடலைப் பாடிய யோகி பி தமிழகம் முழுவதும் பிரபலம். அவரை வைத்து ஒரு பாடலை பதிவு செய்ய உள்ளார் ரஹ்மான். இது ர‌ஜினியின் அறிமுகப் பாடலாக இருக்கும் என்கிறார்கள்.

எந்தப் பாடலாக இருந்தாலும் யோகி பி பாடுவது மட்டும் சந்தேகத்துக்கிடமின்றி உறுதியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்