இயக்குனராகும் படவா கோபி

வெள்ளி, 9 ஜனவரி 2009 (15:30 IST)
சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் படவா கோபி பெரிய திரைக்கு வருகிறார். பொய் படத்தில் பாலசந்தரால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டவர் இந்தமுறை வருவது படம் இயக்க.

தனது நான் ஸ்டாப் பேச்சால் ரசிகர்களை கவர்ந்த படவா கோபி, சென்னை 600 028 படத்தில் கிரிக்கெட் வர்ணனையாளராக வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர். இவர் விரைவில் திரைப்படம் ஒன்றை இயக்குகிறார்.

நான்கு நண்பர்களை பற்றிய இந்தப் படத்தில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடிக்கிறார். இவர் சென்னை 600 028, சரோஜா படங்களில் நடித்தவர். சபா இயக்கத்தில் 16 படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

1995 - 1997 ஆண்டுகளில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தனது படத்தை இயக்குவதாக தெரிவித்தார் கோபி. படத்தில் மொத்தம் இரண்டு ஹீரோயின்கள். ஏப்ரலில் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்