கதைதான் ஹீரோ – கருணாஸ்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:25 IST)
ஹீரோவாக ஜெயித்த இரண்டாவது காமெடியன் என்ற கனம் தலைக்கேறாமல் பேசுகிறார் கருணாஸ்.

திண்டுக்கல் சாரதி வெற்றி பெற்றாலும் காமெடிதான் என்னுடைய பாதை. அதில்தான் கவனம் செலுத்தப் போகிறேன். தடுமாறாமல் வருகிறது பேச்சு.

காமெடியில் கவனம் செலுத்துவது இருக்கட்டும். திண்டுக்கல் சாரதி மாதி‌ி நல்ல கதை அமைந்தால் மீண்டும் ஹீரோவாக நடிப்பீர்களா? விடாமல் கொக்கி போட்டால், விலாங்கு மீனாக நழுவுகிறார்.

“என்னைப் பொறுத்தவரை கதைதான் ஹீரோ. அப்படி ஒரு கதை அமைந்தால் ஹிரோவாக நடிப்பது பற்றி யோசிக்கலா‌ம்.”

ஆக, கருணாஸ் மீண்டும் கதாநாயகனாக‌த் தயார். தேவை நல்ல கதை மட்டுமே.

வெப்துனியாவைப் படிக்கவும்