வினயின் சின்சியா‌ரிட்டி

செவ்வாய், 6 ஜனவரி 2009 (23:20 IST)
ஆள் அழகா மட்டுமில்லை நல்ல குணமாகவும் இருக்கிறார். இயக்குனர்கள் மத்தியில் இப்படி நல்ல பெயர் எடுத்திருப்பவர், வினய். கால்ஷீட் சொதப்புவதில்லை, வீண் செலவுகளை இழுத்துப் போடுவதில்லை என தயா‌ரிப்பாளர்களும் நற்சான்றிதழ் படிக்கிறார்கள்.

வினயின் சொந்த மாநிலம் கர்நாடகா. ஓகேனக்கல் பிரச்சனையில் திவ்யா போன்ற கன்னட நடிகைகள் தமிழகத்துக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபோது, தமிழகத்துக்கு ஆதரவாக திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு தமிழகத்தின் நியாயத்தை எடுத்துச் சொல்லி புல்ல‌ரிக்க வைத்தவர் இவர். விரைவில் நல்ல தமிழில் பேசுவேன் என அப்போது கூறினார். அது வெறும் மேடைப் பேச்சு அல்ல.

சரணின் மோதி விளையாடு படத்தில் நடித்துவரும் வினய் சொந்தக் குரலில் டப்பிங் பேச உள்ளார். சொந்தக் குரலில் பேச வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு தமிழ் படித்திருக்கிறார். டப்பிங் வாய்ஸில் காலம் தள்ளும் நட்சத்திங்கள் இவ‌ரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்