வீராசாமிக்குப் பிறகு விஜய டி. ராஜேந்தர் இயக்கும் படம் ஒருதலைக் காதல். படத்தின் இயக்கம் தொடங்கி நடிப்பு வரை அனைத்தும் இந்த அஷ்டவதானிதான்.
நரை விழும் வயதிலும் நம்பிக்கையிழக்காமல் இருப்பதில் டி.ஆரை அடிக்க ஆளில்லை. இன்றைய இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் விதமாக, தனது எக்ஸ்டரா லார்ஜ் உடம்பை கஷ்டப்பட்டு குறைத்திருக்கிறார்.
படத்தில் இவருக்கு இரண்டு ஜோடிகள். உள்ளூரில் யாரும் அகப்படாமல் மும்பைக்கு நேரில் சென்று இரண்டு குலோப் ஜாமுன்களை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்.
டி.ஆர். என்றால் செட்டும், பாட்டும் இல்லாமலா? ஒருதலைக் காதலில் மொத்தம் எட்டுப் பாடல்கள். பாடல்களின் கம்போஸிங் முடிந்து விட்டதால் அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்.