அமெரிக்கா - சென்னை

செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:56 IST)
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த அக்மார்க் தமிழ்ப் பெண் ஹம்மு அழகும் அறிவும் வாய்ந்த பெண். தற்போது சினிமாவில் நாயகியாக வேஷம் கட்டிக் கொண்டிருக்கிறார். முதல் படம் என்றால் தசாவதாரம் படம்தான். அதில் விஞ்ஞானி கமலுக்கு உதவியாளராக இரண்டு மூன்று காட்சிகளில் நடித்தார்.

அவரின் நடிப்பும், அழகும் பிடித்துப் போக ஒளிப்பதிவாளர் ஜீவன் 'டூயட்' நிறுவனத்துக்காக தான் இயக்கிய 'மயிலு' படத்தில் இவரை நாயகியாக அறிமுகப்படுத்தினார். அப்படம் வெளிவராத நிலையிலும் அடுத்தப் படமான மலையனில் கரணுக்கு ஜோடியாக தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவில் பல கோடிகள், வசதி வாய்ப்புகள் இருந்தும் சினிமாவில் உள்ள ஆர்வத்தால் நடிக்க வந்திருக்கிறார். சிவப்பு நிறம், மாடலான இவர் 'மயிலு' படத்தில் கிராமத்துப் பெண் வேடம் என்பதால் முகத்துக்கு கறுப்பு மேக்கப் போட்டு பாவாடை, தாவணியில் படம் முழுக்க நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு சிறுமியாக இவரின் ஒன்பது வயது தங்கை ஷாலுவே நடித்திருக்கிறார். வருங்கால இன்னொரு நாயகி.

வெப்துனியாவைப் படிக்கவும்