ஷாரு‌க்கானை இய‌க்கு‌ம் முருகதா‌ஸ்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:52 IST)
இயக்குனர் ஏ.ஆர். முருகதாசின் வெற்றி ஒரு உண்மையான உழைப்பாளியின் வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

தீனா, ரமணா, கஜினி-க்குப் பிறகு தற்போது தமிழ் கஜினியை இந்தியில் இயக்க, அதுவும் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. கஜினியை தமிழில் தயாரித்த சேலம் சந்திரசேகரின் தடையையும் தாண்டி... இன்று வெற்றி பெற்றிருக்கிறது.

இதனால் இந்திப்பட உலகில் நிலையான இடத்தைப் பிடித்துவிட்டார் முருகதாஸ். அமீர் கானை இயக்கிய கையோடு அடுத்து ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கப் போ‌கிறார்.

மிகவும் பிரமாண்டமான முறையில் தயாராகும் இப்படத்திற்கான கதை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியில் பெரிய தயாரிப்பாளரான யாஷ் சோப்ரா தயாரிக்க இருக்கிறார்.

இந்தி கஜினி கூட்டணியே இந்தப் படத்திலும் தொடர்கிறது. அதாவது, கஜினிக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு செய்த ரவி.கே. சந்திரன், ஷாருக்கான் படத்திற்கும் வேலை செய்ய இருக்கின்றனர்.

நாயகியாக மட்டும் இந்தியில் உள்ள ஒரு முன்னணி நடிகையே நடிக்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்