ஒரு ஹீரோவுக்கு மூன்று நான்கு ஹீரோயின்கள் ஜோடியாக்குவது தற்போது பேஷனாகி வருகிறது. கதைக்கு என்று இல்லாவிட்டாலும், கவர்ச்சிக்காகத் தேவைப்படுகிறார்கள்.
'நான் அவன் இல்லை' படத்தில் ஜீவனுக்கு ஜோடியாக சினேகா, நமீதா உட்பட நான்கு பேர் நடித்தார்கள். அதைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ஒன்பது ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் வீரா தமிழில் அறிமுகமாகி இயக்கும் 'கார்த்திகை' என்ற படத்தில் மாளவிகா, நிஷா கோத்தாரி, ரக்சனா ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையடுத்து செல்வா இயக்கும் 'நூற்றுக்கு நூறு' படத்தில் ஹீரோ வினய் உடன் சினேகா, சந்தியா, லட்சுமிராய், கஸ்தூரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அழகு தெரிய வேண்டும் என்பதற்காக நான்கு நாயகிகளை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கும் இயக்குனர், தற்போது ஐந்தாவதாக 'திண்டுக்கல் சாரதி' படத்தின் நாயகி கார்த்திகாவையும் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
பின்னே கொடுக்கும் பணத்திற்கு கலகலப்பாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக பார்க்க வேண்டாமா...?