குத்துப் பாடல் மெலடி பாடல் இரண்டும் தேவை

செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:25 IST)
வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் தற்போது மிகவும் பிஸியாக இருப்பவர் சுந்தர் சி பாபு.

அஞ்சாதே படத்திற்கு முன்பே சில படங்களுக்கு இசையமைத்தாலும் அவரை வெளி உலகத்திற்கு பிரபலப்படுத்தியது அஞ்சாதே படத்தில் வரும் 'கத்தாழ கண்ணால குத்தாத' என்ற பாடல்தான். அதற்கு முன்பே வாளமீனுக்கு பாடல் சித்திரம் பேசுதடியில் இசையமைத்திருந்தாலும் கானா உலகநாதனுக்குத்தான் பெயர் கிடைத்தது.

தற்போது கத்தாழ கண்ணால பாடலுக்குப் பின் தற்போது பஞ்சாமிர்தம், நாடோடிகள், அகம் புறம், ஆனந்தம் ஆரம்பம் என்று பெரிய பட்டியலை வைத்திருக்கிறார். தொடர்ந்து குத்துப் பாடல்கள் மெலடி பாடல்கள் இரண்டும் கலந்து இசையமைத்தாலும் மக்கள் மத்தியில் உடனே சென்று சேர்வது குத்துப் பாடல்கள்தான் என்கிறார்.

அதேபோல, தயாரிப்பாளர் செலவில் கம்போஸிங் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சென்று கூத்தடிக்கும் விஷயமும் தனக்கு சுத்தமாகப் பிடிக்காது என்பதோடு... 2009ல் அதிக படங்களுக்கு இசையமைத்த பெருமையை தட்டிச் செல்வேன் என்றும் கூறுகிறார். எண்ணிக்கையை விட தரம் ரொம்ப முக்கியம், பாத்துக்கங்க ஜி.

வெப்துனியாவைப் படிக்கவும்