'கல்லூரி'க்குப் பின் 'கல்லூரி'க்கு முன் என்று நடிகை தமன்னாவின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், கல்லூரிக்குப் பின்தான் அவரது ஸ்கோர் போர்டு உயர்ந்துகொண்டே செல்கின்றன.
ஓரளவுக்கு பெரிய இளம் ஹீரோக்கள் என்றால் சம்பளத்தில் கூட கொஞ்சம் அட்ஜஸ் செய்து படங்களை ஒப்புக் கொள்கிறார். அதுமட்டுமல்ல, வேறு ஒரு நடிகை நடிப்பதாக இருந்து ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு தன்னை அணுகினால் உடனே கால்ஷீட் கொடுத்து விடுகிறார்.
சமீபத்தில் லிங்குசாமியின் திருப்பதி பட நிறுவனத்திற்காக பையா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அட்வான்ஸும் வாங்கிவிட்டார் நயன்தாரா. இடையில் ஏற்பட்ட சில மனத்தாங்கலால் அப்படத்திலிருந்து விலகிக் கொண்டார் நயன்.
அதன் காரணமாக தமன்னாவை அணுகி கால்ஷீட் கேட்க, உடனே ஒப்புக்கொண்டு தேதியும் கொடுத்துவிட்டார். கேட்டால் என்னால் முடியும் என்று நம்பி வந்து நடிக்கக் கேட்பவர்களை ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பக்கூடாது என்பதற்காகத்தான் என்றுவேறு கூறுகிறார்.