எந்திரன் படக் காட்சிகள் நீக்கம்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:23 IST)
ஐங்கரன் பட நிறுவனத்திலிருந்து கைமாறிய எந்திரன் தற்போது சன் பிக்சர்ஸுக்கு வந்துள்ளது.

பல கோடிகள் செலவாகும் என்று தெரிந்தும் எந்திரனை எடுக்கத் திட்டமிட்ட ஐங்கரன், பைனான்ஸ் கொடுக்க முன்வந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் திடீரென கைவிரிக்க, மேற்கொண்டு படத்தை எடுக்க முடியாமல் திண்டாட, அதன் பின்தான் சன் பிக்சர்ஸ் இதுவரை செலவான தொகையைக் கொடுத்துவிட்டு எழுதி வாங்கியிருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் ரஜினிதான். தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனை நேரில் சந்தித்து மேற்கொண்டு படத்தை தயாரிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஒப்புக்கொண்டுள்ளார் கலாநிதி.

இதுவரை எடுத்த எந்திரன் படக் காட்சிகளைப் பார்த்த கலாநிதியும், சக்ஸேனவும் சில காட்சிகளை இன்னும் பிரமாண்டமாக எடுத்தால்தான் நன்றாக இருக்கும் என்று அந்த‌க் காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படம் பிடிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

போட்ட பட்ஜெட்டுக்கு மேல் இன்னும் எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை என்று சொல்ல... தோசை மாவைக்கூட தங்கத்தில் அரைக்க ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் ஷங்கர்.

வெப்துனியாவைப் படிக்கவும்