'கண்ணதாசன் காரைக்குடி' பாடலுக்கு நடனம் அமைத்து, யார் இந்த டான்ஸ் மாஸ்டர் என்று திரும்பிப் பார்க்க வைத்தவர் நடன இயக்குனர் பாபி.
எத்தனையோ படப் பாடல்களுக்கு நடனம் அமைத்தாலும் இந்தப் பாடலே மக்கள் மத்தியில் பிரபலமானது. அதற்குப் பின்னால் தெனாவட்டு, பூ, மகேஷ் சரண்யா மற்றும் பலர் படங்களுக்கு நடனம் அமைத்தார்.
ஒன்றிரண்டு பாடல்களுக்கு மட்டும் நடனம் அமைத்து வந்த பாபி தற்போது அ ஆ இ ஈ படத்துக்கு முழுமையாக நடனம் அமைக்கிறார்.
அப்படி அந்தப் படத்தில் இடம்பெறும் 'கண்ணிவெடி உன் கண்ணில்' என்ற பாடலுக்கு மட்டுமே ஏராளமான நடன அசைவுகளை வைத்து கிட்டத்தட்ட 456 கட் ஷாட்களை பாடலில் இணைத்துள்ளார்.
இதுவரை அப்படி கட் ஷாட்களை எடுத்து இணைக்கும் இயக்குனர் வஸந்தையே மிஞ்சிவிட்டார் பாபி.
மேலும், இதுவரை பல இயக்குனர்கள் நடிக்க அழைத்தும், நடனமே போதும் என்று புன்னகைக்கிறார். இப்படி ஆரம்பத்தில் புன்னகைத்து எத்தனையோ டெக்னீஷியன்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம்தானே...