அடுத்து இந்திப் படம் - ஸ்ரீஸ்ரீநிவாஸ ரெட்டி

செவ்வாய், 6 ஜனவரி 2009 (22:15 IST)
சாமிடா படத்தின் மூலம் அனைவ‌ரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் அப்படத்தின் ஒளிப்பதிவாளர், ஸ்ரீஸ்ரீநிவாஸ ரெட்டி. இந்திப் படங்களில் அசிஸ்டெண்ட்டாக பணிபு‌ரிந்திருக்கும் இவ‌ரின் முதல் படம் சாமிடா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பூக்கடை ரவி படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறவரை படப்பிடிப்பு இடைவேளையில் சந்தித்தோம்.

“சாமிடா படத்தைப் பார்த்து எல்லோரும் பாராட்டுறாங்க. லடாக்கில் எடுத்த பாடல் காட்சி அனைவருக்கும் பிடிச்சிருக்கு. அந்த பாடல் காட்சியில் எந்த கலர் கரெ‌‌க்சனும் பண்ணலை. அங்குள்ள மலைகளின் கலரே அப்படிதான் விதவிதமா இருக்கும். பா‌ரின் போனாலும் இதுமாதி‌ி பார்க்க முடியாது.

இப்போ நரேன் நடிக்கிற பூக்கடை ரவி படத்துக்கு ஒளிப்பதிவு பண்றேன். இது சாமிடாவிலிருந்து மாறுபட்ட கதைக் களம். மதுரை பின்புலத்தில் கதை சொல்லப்படுது. கதைக்கு எது தேவையோ அதை செய்வதுதான் சிறந்த ஒளிப்பதிவுன்னு நினைக்கிறேன்.”

அடுத்து சுப்ரமணியம் சிவா இயக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் ஸ்ரீஸ்ரீநிவாஸ ரெட்டி. அது முடிந்ததும் இந்திப் படம் ஒன்றிற்கு ஒளிப்பதிவு செய்யும் திட்டம் அவ‌ரிடம் இருக்கிறது. “இப்போதே நிறைய ஆஃபர்கள் வருகிறது.” என்றார் உற்சாகத்துடன்.

வாழ்த்திவிட்டு விடைபெற்றோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்