ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஷ்வாஸ்நெகரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம் டெர்மினேட்டர். ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டெர்மினேட்டர் சீரிஸின் இரண்டாம் பாகமான, டெர்மினேட்டர் - தி ஜட்ஜ்மெண்ட் டே உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது. சென்னையில் இந்தப் படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
டெர்மினேட்டர் சீரிஸின் மூன்றாம் பாகத்திலும் அர்னால்டே நடித்திருந்தார். விரைவில் நான்காம் பாகம் தயாராக உள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் கவர்னராக இருக்கும் அர்னால்ட் அரசியல் பணி காரணமாக நான்காம் பாகத்தில் நடிக்கவில்லை. அவருக்குப் பதில் அவரைப் போலவே கட்டுமஸ்தான உடம்புக்கு சொந்தக்காரரான ரோலான்ட் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிவுட் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்கவிருக்கும் ரோலான்ட் தற்போது ஜெயம் ரவியிடம் உதை வாங்கிக் கொண்டிருக்கிறார். ஜனநாதன் இயக்கத்தில் ரவி நடிக்கும் பேராண்மை படத்தில் தமிழக காட்டுக்குள் ஊடுருவும் வெளிநாட்டு தீவிரவாதியாக நடித்து வருகிறார் ரோலான்ட். இவரைத் தவிர மேலும் பல வெளிநாட்டு நடிகர்கள் பேராண்மையில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து ஹீரோயின்கள். ஆனால் யாரும் ஹீரோ ரவிக்கு ஜோடி இல்லை. மேலும் படத்தில் அவருக்கு டூயட்டும் கிடையாது.