ஆங்கிலப் படங்களை அப்பட்டமாக சுட்டு படம் பண்ணுகிறவர்கள் மத்தியில் வெங்கட்பிரபு ரொம்பவே வித்தியாசமானவர். தனது படங்களுக்கு எது இன்ஸ்பிரேஷனாக அமைந்ததோ அதை படம் தொடங்கும் முன்பே முறைப்படி அறிவித்து விடுவார்.
சரோஜா படத்தின்போது, ஆங்கிலத்தில் வெளியான பேபல் படமே சரோஜாவுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என முதலிலேயே தெளிவுப்படுத்தினார். இத்தனைக்கும் இரண்டு படங்களுக்கும் நடுவில் ஆறு ஒற்றுமைகளைகூட காண்பிக்க முடியாது.
வெங்கட்பிரபுவின் அடுத்தப் படம் கோவா. நான்கு தமிழ் நாட்டு இளைஞர்கள் வெளிநாட்டு துணை தேடி கோவா செல்கின்றனர். அதேபோல் இந்திய இளைஞர்களின் துணைக்காக நான்கு வெளிநாட்டு யுவதிகள் கோவா வருகின்றனர். இந்த சந்திப்பில் நிகழும் நல்ல, கெட்ட விஷயங்கள்தான் கோவாவின் கதை.
சில மாதங்கள் முன் கோவாவில் கொலை செய்யப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த இளம் பெண் ஸ்கார்லெட்டின் கதையே கோவாவுக்கு இன்ஸ்பிரேஷன் என தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு.
சௌந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோ, வார்னர் பிரதர்ஸுடன் இணைந்து கோவாவை தயாரிக்கிறது.