சன் பிக்சர்ஸ் தயா‌ரிப்பில் எந்திரன்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (21:45 IST)
எந்திரன் படத்தை ஐங்கரன் நிறுவனத்திடமிருந்து முறைப்படி வாங்கியுள்ளது, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதனை கலாநிதி மாறன் நேற்று அதிகார‌ப்பூர்வமாக அறிவித்தார்.

ர‌ஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கும் எந்திரன் 150 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. ஐங்கரன் நிறுவனம், இராஸ் இண்டர்நேஷனலுடன் இணைந்து எந்திரன் படத்தை தயா‌ரிக்கிறது. உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார ச‌ரிவை தொடர்ந்து எந்திரனை போன்ற மெகா பட்ஜெட்டில் படங்கள் பாதிப்புக்குள்ளாயின.

கமலின் மர்மயோகி படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. மணிரத்னத்தின் புதிய படத்தின் பட்ஜெட்டை கணிசமான அளவு குறைக்கும்படி ‌ிலையன்ஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. எந்திரன் படத்தின் பட்ஜெட்டையும் குறைக்க ஷங்கர் நிர்ப்பந்திக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. 150 கோடியில் தயாராகும் எந்திரன் அதனை வசூலிக்குமா என்ற சந்தேகம் தயா‌ரிப்பாளர்களுக்கு ஏற்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் ஐங்கரனிடமிருந்து முறைப்படி வாங்கி படத்தை தயா‌ரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. சில மாதங்கள் முன் தொடங்கப்பட்ட சன் பிக்சர்ஸ் தனது அபார விளம்பரத்தால் மினிமம் பட்ஜெட்டில் தயாரான காதலில் விழுந்தேன் படத்தை மெகா பட்ஜெட் படங்களுக்கு‌ரிய ஆர்ப்பாட்டத்துடன் வெளியிட்டதுடன் கணிசமான லாபமும் சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் எந்திரனை வாங்கியுள்ளதால் பைனான்ஸ் பிரச்சனை இல்லாமல் எந்திரன் அதே 150 கோடி பட்ஜெட்டில் தயாராகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்