சென்ற வாரம் கோடம்பாக்கத்தை சுற்றி வந்த வதந்தி, செளந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோ தயாரிக்கும் படத்தில் நகுல் நடிக்கிறார்!
செளந்தர்யாவும், நகுலும் ஒன்றாக படித்தவர்கள் என்ற ப்ளாஷ்பேக், இந்த வதந்திக்கு மேலும் மெருகூட்டியது.
கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் மாசிலாமணி படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கும் நகுல் வதந்தி குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை.
இந்நிலையில், தனது ஆக்கர் ஸ்டுடியோ நகுலை வைத்து எந்தப் படத்தையும் தயாரிக்கவில்லை என விளக்கமளித்துள்ளார் செளந்தர்யா.
ரஜினியை வைத்து உருவாகும் சுல்தான் தி வாரியரை அட்லாட்சுடன் இணைந்து தயாரித்து வரும் ஆக்கர் ஸ்டுடியோ, அடுத்து வெங்கட்பிரபுவின் கோவா படத்தை தயாரிக்க மட்டுமே ஒப்பந்தம் போட்டுள்ளது. கோவாவை ஆக்கருடன் வார்னர் பிரதர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.