சுரேஷ்கிருஷ்ணாவின் ஆறுமுகம் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இட்லி கடை நடத்தும் பரத்துக்கும், கோடீஸ்வர ரம்யா கிருஷ்ணனுக்கும் நடக்கும் மோதல் ஏன், எதற்கு என்பதுதான் படத்தின் கதை.
சமீபத்தில் ஒரு பாடல்காட்சி ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமானது. மும்பை மார்க்கெட் செட் அமைத்து இந்த பாடலை எடுத்தார் சுரேஷ் கிருஷ்ணா. நடனம் அமைத்தவர் அசோக்.
தான் இயக்கும் படங்களின் பாடல்களை மட்டும் எழுதி வந்த இயக்குனர் பேரரசு, பிற இயக்குனர்கள் படங்களுக்கும் தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகிறார். மார்க்கெட் பாடலும் இவரது கை வண்ணமே.
உத்து உத்து பாருடா மொத்தம் முகம் நூறுடா இட்லி வடை தோசைடா நாங்க வித்தா காசுடா..
பரத் ஆடிய இந்தப் பாடலை சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். ப்ரியாமணி இந்தப் படத்தில் பரத் ஜோடியாக நடித்து வருகிறார்.