அஆஇஈ, குரு என் ஆளு, அபியும் நானும், திண்டுக்கல் சாரதி, நியூட்டனின் 3 ஆம் விதி, திருவண்ணாமலை, என்னை தெரியுமா?, பஞ்சாமிர்தம், சிலம்பாட்டம், தநா 07 அல 4777, இன்னொருவன், வெடிகுண்டு முருகேசன்.. இவையெல்லாம் டிசம்பரில் வெளிவர இருக்கும் படங்களின் சின்ன பட்டியல். முழுமையான பட்டியல் இன்னும் நீளம்.
நாலு படம் சேர்ந்து வெளியானாலே திரையரங்குகள் திணறிப்போகும். இதில் இரண்டு டஜன் படங்களை எப்படி சமாளிப்பது? டிசம்பர் ட்ராஃபிக்கில் மாட்டிய பல படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை அடுத்த மாதத்திற்கு அவசர அவசரமாக மாற்றி வருகின்றன.
இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாவதாக இருந்த அஆஇஈ படத்தின் ரிலீஸை அடுத்த மாதம் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு. இதேபோல் பல படங்களின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
அபியும் நானும், திண்டுக்கல் சாரதி, பஞ்சாமிர்தம் படங்களின் ரிலீஸ் மடடுமே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.