அரை செஞ்சுரியை அமர்க்களமாக்க நினைக்கிறார், விஜய். பொங்கலுக்கு வெளிவரும் வில்லு இவரது 48வது படம். 49வது படத்தை ஏவி.எம். தயாரிக்கிறது. இயக்கம் தரணியின் உதவியாளர் பாபு சிவன். வேட்டைக்காரன் படத்தின் பெயர்.
ஐம்பதாவது படத்தை யார் கையில் ஒப்படைப்பது? மலையாள இயக்குனர் சித்திக் விஜயை சந்தித்து மலையாளத்தில் திலீப்பை வைத்து இயக்கும் பாடிகார்ட் படத்தின் கதையை கூறினார். அக்கறையாக கதை கேட்ட இளைய தளபதி இன்னும் சம்மதம் என்று தலையசைக்கவில்லை.
இந்நிலையில் தம்பியை மட்டுமே இயக்கிவந்த ஜெயம் ராஜா விஜயை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். இதுவரை ரீ-மேக் படங்களை இயக்கி வந்தவரின் முதல் சொந்த ஸ்கிரிப்ட். கேட்டவர் இன்னும் வாய் திறக்காததால் ஐம்பதாவது பட அதிர்ஷ்டம் சித்திக்கிற்கா இல்லை ராஜாவுக்கா என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.