இஸ்பகதாராவும், டப்பிபோ டிப்போவும்

செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:56 IST)
குடிகாரனின் உளறல் போலிருக்கும் இவை வரயிருக்கும் இரண்டு படங்களில் இடம்பெற்றிருக்கும் பாடல் வ‌ரிகள்.

ஒயமாசீயா என்ற பொருள் இல்லாத வார்த்தையை காக்க காக்க மூலம் பிரபலப்படுத்தி இந்த புதிய கலாச்சாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட பெருமைக்கு‌ரியவர், ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ். அவர் போட்ட ஒத்தையடி பாதையில் தார் போட்டு காரோட்டியவர், விஜய் ஆண்டனி.

ஆண்டனியின் டைலமோ பாடலும், நாக்க முக்க பாடலும் பட்டிதொட்டியெங்கும் சக்கை போடு போட்டது தெ‌ரியும். அந்த வ‌ரிசையில் புதிதாக இணைகிறது, அஆஇஈ யில் இடம்பெறும் டப்பிபோ டிப்போ என்று தொடங்கும் பாடல். முதலிரண்டு பாடல்கள் போல இதுவும் பிரபலமாகும் என்கிறார், ஆண்டனி.

இவருக்கு போட்டியாக ஒரு பாடல் கம்போஸ் செய்திருக்கிறார், இசையமைப்பாளர் ஜாஸி கிஃப்ட். பட்டாளம் படத்தில் அந்தப் பாடல் இடம்பெறுகிறது. பாடலின் முதல்வ‌ரி இஸ்பகதாரா என தொடங்குகிறது. பாடலுக்கு இப்பவே எஃ‌‌ப்.எம்.களில் ரெட் கார்ப்பெட் வரவேற்பு.

தமிழ் சினிமாவின் பாடல்களை கேட்டால் பாதி தமிழ் மறந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்