சிவாஜி புரொடக்சன் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்துக்கு இயக்குனர் முடிவாகிவிட்டார்.
ஏகனுக்குப் பிறகு அஜித் சிவாஜி புரொடக்சனுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். படத்தை கௌதம் இயக்குவதாக திட்டம்.
ஆனால், கதை சொல்லாமல் கௌதம் நாட்களை கடத்தியதால் அவரை படத்திலிருந்து நீக்கியது, சிவாஜி புரொடக்சன். இதனைத் தொட்ர்ந்து தரணி, விஷ்ணுவர்தன் உள்பட பல இயக்குனர்கள் பரிசீலிக்கப்பட்டனர்.
இறுதியில் சரணை ஒப்பந்தம் செய்துள்ளனர். அஜித், சரண் இணைந்து பணிபுரிந்த அனைத்துப் படங்களும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மோதி விளையாடு படத்தை வினயை வைத்து இயக்கிவரும் சரண் அது முடிந்ததும் அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறார். படத்துக்கு அமர்க்களம், அட்டகாசம் வரிசையில் அசல் என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர்.