கமலின் குரு பக்தி அனைவருக்கும் தெரியும். சிலோன் பிரச்சனையைப் பற்றி பேசினாலும், தனது குரு பாலசந்தர் பற்றி அதில் நாலு வார்த்தை சேர்க்காமல் இருக்கமாட்டார், இந்த சிஷ்யர். அந்தளவுக்கு பாலசந்தர் மீது மரியாதை.
கமல் உலக நாயகனாக உயர்ந்த பிறகு பாலசந்தர் அவரை வைத்து படம் இயக்கவில்லை என்பதுடன், அவரது நிறுவனமும் கமலை பயன்படுத்தவில்லை. மாறாக ரஜினியை வைத்து அதிக படங்கள் தயாரித்தது கவிதாலயா. லேட்டஸ்ட், குசேலன்.
இந்நிலையில் கமலை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காட்டுகிறது கவிதாலயா. கமலும் அதற்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். கமலுக்கேற்ற நல்ல ஸ்கிரிப்டை தேடி வருவதாக பாலசந்தரின் மருமகனும் கவிதாலயாவின் பொறுப்புகளை கவனிப்பவருமான கந்தசாமி தெரிவித்தார்.