மறைந்த இயக்குனர் ஜீவாவின் மனைவி அனீஸ் இந்திப்பட தயாரிப்பாளர் விக்ரம் பட்டுடன் இணைந்து தயாரிக்கும் படம் முத்திரை. லட்சுமிராய் இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்திப்பட தயாரிப்பாளர் தனது பங்காக சர்ச்சைக்கும் கச்சைக்கும் புகழ்பெற்ற ராக்கிசாவந்தை ஒரு பாடலுக்கு ஆட அழைத்து வந்துள்ளார்.
சென்னையிலுள்ள கெயிட்டி திரையரங்கில் ராக்கிசாவந்தின் ஆட்டம் படமாக்கப்பட்டது. ராக்கியுடன் அவருக்கு எந்த விதத்திலும் கவர்ச்சியில் குறையாத பதினைந்து மும்பை டான்ஸர்கள் உடன் ஆடினர்.
பழமையான கெயிட்டி திரையரங்கு மூடப்பட்டு தற்போது ப்ப்பிடிப்புக்கு வாடகைக்கு விடப்படுகிறது. விக்ரம் நடித்துவரும் கந்தசாமி பட்த்தின் பாடல் காட்சி ஒன்று இதற்குமுன் இங்கு படமாக்கப்பட்டது.