மலையாள நடிகர் சீனிவாசனின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளியான வடக்கு நோக்கி எந்திரம் படத்தை திண்டுக்கல் சாரதி என்ற பெயரில் ரீ-மேக் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே சீனிவாசனின் பல படங்களை ரீ-மேக் என்ற பெயரில் குதறி எடுத்திருக்கிறார்கள் நம்மவர்கள். லேட்டஸ்ட், குசேலன். திண்டுக்கல் சாரதி படத்தில் கருணாஸ், நம்நாடு கார்த்திகா நடிக்கின்றனர். சிவ சண்முகம் படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஜேடி - ஜெர்ரியும் இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். அதாவது ஒரு பாடலுக்கு. உல்லாசம், விசில் படங்களை இயக்கிய இவர்கள் விளம்பரத்துறையில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் சாரதியில் ஒரு பாடலை மட்டும் இயக்கித்தரும்படி சிவ சண்முகம் இவர்களை கேட்க, உற்சாகமாக ஒத்துக் கொண்டு இயக்கி தந்திருக்கிறார்கள்.
பாடலுக்கு ஒருவர், செண்டிமெண்ட் காட்சிக்கு ஒருவர், சண்டைக் காட்சிக்கு ஒருவர் என பிரித்துக் கொண்டால் படமும் நன்றாக வரும், பலருக்கு வேலை கிடைத்த மாதிரி இருக்கும். யோசிக்க வேண்டிய விஷயம்.