பிரசன்னா நடிக்கும் பலே பாண்டியா பலருக்கு அறிமுக படமாக அமைய உள்ளது.
கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்தை சித்தார்த் இயக்குகிறார். இவர் மித்ரா மீடியா மூலம் சிவாஜி, தனம், எந்திரன் உள்பட முக்கியமான படங்களுக்கு டிஸைனராக பணிபுரிந்தவர்.
பலே பாண்டியா இவருக்கு இயக்குனராக முதல் படம். இதுவரை பாடகராக இருந்த தேவன் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் முத்திரை பதிக்க உள்ளார்.
அன்பே சிவம், காஞ்சீவரம் படங்களுக்கு வசனம் எழுதிய கார்ட்டுனிஸ்ட் மதன் பலே பாண்டியாவுக்கு வசனம் எழுதுகிறார். ஏகன் படம் சரியாக போகாததால் மீண்டும் நடன இயக்குனராக மாறியிருக்கும் ராஜு சுந்தரம் ஏகனுக்குப் பிறகு நடனம் அமைக்க ஒப்புக் கொண்ட முதல் படமும் இதுதான்.
ஹீரோயின் கிடைத்ததும் படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராக உள்ளது பலே பாண்டியா டீம்.