ரஜினியின் வாழ்க்கை வரலாறை அவருடைய ஒப்புதலுடன் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட டாக்டர் காயத்திரி ஸ்ரீகாந்த், அதனை தமிழிலும் வெளியிட இருக்கிறார். நாளை இதற்கான விழா நடைபெற உள்ளது.
ஆங்கிலத்தில் காயத்திரி ஸ்ரீகாந்த் தனது புத்தகத்துக்கு தி நேம் இஸ் ரஜினி என பெயர் வைத்திருந்தார். தமிழில் இப்புத்தகம் ரஜினியின் பேரை கேட்டாலே என்ற பெயரில் தயாராகியுள்ளது. இதில் ஆங்கில புத்தகத்தில் இடம் பெறாத பல விஷயங்களை இணைத்திருக்கிறாராம் காயத்திரி.
நாளை நடைபெறும் விழாவில் கனிமொழி எம்.பி. புத்தகத்தை வெளியிட தொழிலதிபர் மீனா ரெட்டி முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.