முறுக்கிய மீசையும், முதுகுக்குப் பின் செருகிய அரிவாளுமாக முரட்டு கதாபாத்திரங்களில் விளாசிக் கொண்டிருந்த பருத்திவீரன் சரவணன், முதல்முறையாக இளகிய மனசுக்காரராக நடிக்கும் படம் பிஞ்சு மனசு.
பெயரைப் போலவே பிஞ்சு குழந்தை ஒன்றை பற்றிய கதையிது. இளங்கோவன் பிலிம்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பில் இளங்கோவன் என்பவர் இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்தில் சரவணனுக்கு ஜோடி தர்ஷா என்ற புதுமுகம்.
சரவணன், தர்ஷா தம்பதிகளுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு வராது வந்த மாணிக்கமாக ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தை திடீரென்று காணாமல்போக, இருவரும் துடித்துப் போகிறhர்கள். குழந்தை எப்படி காணாமல் போனது? குழந்தையை அவர்கள் கண்டுபிடித்தார்களா? இந்த கேள்விகளுக்கு மனசு கரையும்விதமாக பதில் சொல்கிறது பிஞ்சு மனசு.
படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறவர் டி.ஜெய்ராம்.