இயக்குனர்கள் அமீர், சீமான் மீது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவித்ததாக கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் சீமான், அமீர் இருவரும் மதுரை நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும், பாஸ்போர்ட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது.
இந்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று இயக்குனர்கள் சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இதனால் தடைபட்டுபோன அமீரின் யோகி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.