நவம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட வெண்ணிலா கபடிக் குழு அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.
புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு மெகா பட்ஜெட் படங்களுக்கு இணையான எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் பழனியில் இதன் படப்பிடிப்பு நடந்தது.
பழனி மலை அடிவாரத்தில் இதற்காக கபடி மைதானம் அமைக்கப்பட்டு கபடி போட்டி நடத்தப்பட்டது. கபடி விளையாட ஆள் பற்றாக்குறை இருந்ததால் உள்ளுர் கபடி அணியும் படப்பிடிப்பில் கலந்து கொண்டது.
இந்தப் படத்தின் வசனத்தை பாஸ்கர் சக்தி எழுதியுள்ளார். முதல் முறையாக கவிஞர் பிரான்சிஸ் கிருபா இந்தப் படத்துக்கு பாடல்கள் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.