ப்ரியதர்ஷன் படங்களில் தொடர்ந்து பணிபுரிந்துவரும் கலை இயக்குனர் சாபு சிரிலுக்கு விருது கிடைக்கும் என்கிறார்கள் காஞ்சிவரம் படத்தில் அவரது உழைப்பை பார்த்தவர்கள்.
ப்ரியதர்ஷன் இயக்கிய பீரியட் படமான சிறைச்சாலைக்கு அரங்கு அமைத்தவர் சாபு சிரில். இந்தப் படத்துக்காக இவர் அமைத்த அந்தமான் சிறைச்சாலை பெரும் பாராட்டை பெற்றது.
ப்ரியதர்ஷனின் புதிய படம் காஞ்சிவரத்திற்கும் இவரே அரங்கு அமைத்துள்ளார். உலகம் முழுவதும் பாராட்டைபெற்று வரும் இப்படம் சாபு சிரிலுக்கு விருது பெற்றுத்தரும் என்கிறார்கள். அந்தளவுக்கு நாற்பதுகளில் காஞ்சிவரம் எப்படி இருந்ததோ அதை மறு உருவாக்கம் செய்துள்ளார் சாபு.
கோவா திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் இப்படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.