எங்க ராசி நல்ல ராசி படத்தில் நடித்துவரும் விஷ்வா தனது படங்கள் குறித்து பத்திரிகையாளர்களிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
விஷ்வா பிரபல தயாரிப்பாளர் ஜி.ஆரின் மகன். அப்பா தயாரிப்பாளராக இருப்பதுடன் நடிகராகவும் பல படங்களில் பணிபுரிந்திருப்பதால் நடிப்பு ஆசை விஷ்வாவையும் தொற்றியிருக்கிறது. இன்ஜினியரிங் முடித்தவர் வெளிநாட்டில் கிடைத்த நல்ல வேலையை சினிமாவுக்காக உதறியி ருக்கிறார்.
எங்க ராசி நல்ல ராசியில் முரளியுடன் நடிப்பவர் அடுத்து ஆண்டாள் அழகர் படத்தில் நடிக்கிறார். சரி, படிப்பு?
இனி தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடிப்பதுதான் அவரது ஒரே வேலையாம். சவாலான வேலையைதான் தேர்ந்தெடுத்திருக்கிறார் விஷ்வா.