இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் காஞ்சிபுரம்!
புதன், 7 ஜனவரி 2009 (21:54 IST)
2008-ம் ஆண்டுக்கான 39-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் என்ற தமிழ்ப் படம் உட்பட 8 திரைப்படங்கள் வெள்ளியன்று திரையிடப்படுகின்றன.
இதில், காஞ்சிபுரம் என்ற தமிழ் படமும் திரையிடப்படுகிறது. பட்டு ஆடைகள் உற்பத்தி செய்யும் இடமான காஞ்சிபுரத்தில் ஒரு தனி மனிதன் எவ்வாறு சமூகத்திற்கும் தன்னுடைய தனிப்பட்ட கருத்துக்களுக்கும் இடையே அவதிப்படுகிறான் என்பது குறித்து காஞ்சிபுரம் படம் விளக்குகிறது.