சர்வம் படத்தின் கிளைமாக்ஸ் என்னவாக இருக்கும் என த்ரிஷாவின் ரசிகர்கள் குழம்பியது போலவே படக்குழுவும் திணறுவதாக தகவல்.
பீமா படத்தில் இறந்து போவதாக த்ரிஷா நடித்ததை அவரது ரசிகர்களும், நண்பர்களும் விரும்பவில்லை. இனி இதுபோன்ற வேடத்தில் நடிக்காதீர்கள் என்று அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இனி அப்படி நடிப்பதில்லை என்று அறிவித்தார் த்ரிஷா.
ஆனால், விதி வலியது. சர்வம் படத்திலேயே அப்படியொரு காட்சியில் நடிக்கும் நிர்ப்பந்தம் வந்தபோது கலங்கிப் போனார் த்ரிஷா. இறந்து போவதுபோல நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியதை இயக்குனர் விஷ்ணுவர்தன் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் த்ரிஷாவின் கருத்தை மதித்து இருவிதமான கிளைமாக்ஸை எடுத்துள்ளாராம் விஷ்ணுவர்தன். ஓன்று த்ரிஷா இறப்பது போல். இன்னொன்று அவர் பிழைத்துக் கொள்வது போல். இதில் எந்த கிளைமாக்ஸ் படத்தில் இடம்பெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை. ரசிகர்களின் கருத்தறிந்து படம் வெளியான பின்பே கிளைமாக்ஸ் தீர்மானிக்கப்படுமாம்.