ஆக்சன் ஹீரோ மயக்கத்தில் இளம் ஹீரோக்கள் கிறங்கி கிடக்க, கதை ஹீரோவாக இருக்கும் படத்தில் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறேன் என்று ஆச்சரியப்பட வைக்கிறார், அஜ்மல்.
அஞ்சாதே படம் மூலம் ரசிகர் இதயங்களில் பசையாக ஒட்டிக் கொண்ட இவர் தற்போது லட்சுமிகாந்தன் இயக்கும் தநா 07 அல 4777 படத்தில் நடித்து வருகிறார். இவருடன் நடிப்பவர் பசுபதி. அஜ்மலுக்கு ஜோடி மீனாட்சி.
இந்தப் படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் உதவியாளர் நந்தினி இயக்கும் படத்தில் அஜ்மல் நடிக்கிறார். காமெடி நிறைந்த காதல் கதையிது. சத்யம் சினிமாஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இதனையடுத்து சரணின் அசிஸ்டெண்ட் வெங்கட் இயக்கும் ஆக்சன் படத்தில் நடிக்கயிருக்கிறார் அஜ்மல். அறிமுகமான மலையாளத்திற்கு கால்ஷீட் கொடுக்காமல் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.