சினேகா தனது சிரிப்பை ஓரமாக ஒதுக்கி வைத்து நடித்துவரும் படம் பவானி. ஐவஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் ரீ மேக்கான இதில் பரவை முனியம்மாவின் பாடல் ஒன்று இடம்பெறுகிறது.
தூள் படத்தில் விக்ரமின் வீரத்தை புகழ்ந்து அவர் பாடும் சிங்கம்போலே நடந்து வந்தான் செல்ல பேராண்டி பாடலுக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல இந்தப் பாடல்.
ஏ கருப்பசாமி ஏ கருப்பசாமி காக்கி சட்டை போட்ட மாதிரி காவலுக்கு நின்னா வேங்கை மாதிரி
என்று தொடங்குகிறது அந்தப் பாடல்.
ஆர்த்தி குமார் இயக்கும் இந்தப் படத்தில் கோட்டா ஸ்ரீனிவாசன், ராஜ்கபூர்,பொன்னம்பலம் போன்ற படா வில்லன்களுடன் மோதி ஜெயிக்கிறார் சினேகா. சினேகாவின் முறுக்குக்கு ஈடு தரும் வகையில்; காமெடியில் கலக்கயிருக்கிறார் விவேக்.