சிம்பு நடித்திருக்கும் சிலம்பாட்டம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
ஒளிப்பதிவாளர் எஸ்.சரவணன் முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் சிலம்பாட்டம். லட்சுமி முவி மேக்கர்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் முதல் முறையாக பிராமண இளைஞனாக நடித்துள்ளார் சிம்பு. அக்ரஹாரத்து பெண்ணாக சனாகான் நடித்துள்ளார்.
படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் சிம்புவுடன் சினேகா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை. ரஜினி படத்தில் வரும் வச்சுக்கவா உன்னை மடடும் பாடல் இந்தப் படத்துக்காக ரீ மிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
ஸ்பார்ட் எடிட்டிங் செய்யப்பட்ட இப்படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. படப்பிடிப்பு முடியாததால் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.