திருடா திருடி, வல்லமை தாராயோ படங்களில் நடித்த சாயாசிங், தற்போது நடித்துவரும் ஒரே படம் ஆனந்தபுரத்து வீடு.
தமிழில் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லாததால், கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட சாயாசிங், தனது கவனத்தை கன்னடத் திரைப்படம் பக்கம் திருப்பியிருக்கிறார்.
தற்பொழுது விஷ்ணுவர்தனுக்கு தங்கையாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
மதுமிதா இயக்கிய வல்லமை தாராயோ படத்தில் நடிக்கும் போதே கிட்டத்தட்ட உதவி இயக்குனராகவே அந்தப் படத்தில் இருந்தார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ள சாயாசிங், அதற்கான ஸ்கிரிப்டை தயார் செய்து வருகிறார். படத்திற்கு காந்தி நகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.