நாளை குலு மணாலியில் எந்திரனின் மூன்றாவது ஷெட்யூல் தொடங்கியிருக்க வேண்டும். சில கோளாறுகள். நாலு நாள் கழித்து 20 ஆம் தேதி குலு மணாலி செல்கிறது எந்திரன் யூனிட்.
மர்மயோகி பைனான்ஸ் பிரச்சனையால் நின்றுபோன அதே நேரம், எந்திரன் படப்பிடிப்பும் தள்ளிப்போக, அந்த சின்ன இடைவெளியை வதந்தியால் ஊதி நிரப்பி விட்டார்கள் வதந்தி தாசர்கள்.
இதனை ஐங்கரன் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எந்திரன் உலகளாவிய படம். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் திட்டமிட்டபடி வேலைகள் நடந்து வருகிறது என அறிவித்துள்ளது.