சிறப்பாக, சிந்தையை கவரும் வகையில் மட்டுமல்ல, சில்லறையை சேர்க்கும் விதத்திலும் உருவாகியிருக்கிறதாம் சசியின் பூ.
மோசர் பேர் தயாரித்த இப்படத்தைப் பார்த்து பரவசமான சத்யம் சினிமாஸ், பூவின் சென்னை உரிமையை வாங்கியுள்ளது.
சுப்ரமணியபுரம் படத்தை தயாரித்து இயக்கி நடித்த சகிகுமாரை விநியோகஸ்தராக உயர்த்தியிருக்கிறது பூ. மதுரை, ராமநாதபுரம் ஏரியா விநியோக உரிமையை கேட்ட பணத்துக்கு வளைத்துப் பிடித்திருக்கிறார் சசிகுமார்.
சமுத்திரக்கனியின் நாடோடிகள் படத்தில் நடித்து வருகிறவர் இயக்குனராக அடுத்தப்படம் 2009ல் என்பதில் உறுதியாக இருக்கிறார். தாடிக்காரருக்கு பிடிவாதம் ஜாஸ்திங்கோ!